அண்மையில் அமெரிக்க மத்திய அரச ஊழியர் அணியில் ஆட்குறைப்பு செய்ததையடுத்து, எலோன் மஸ்க்கிற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் Tesla கார்க் கண்காட்சி அறைக்கு வெளியே நடத்தப்பட்ட பேரணியில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஜக்சன்வில், புளோரிடா, டக்சன் மற்றும் அரிஸோனா உள்ளிட்ட நகரங்களில் உள்ள Tesla மின்சாரக் கார் கடைகளுக்கு வெளியே பலர் பேரணி நடத்தினர்.
அதனால் வீதிப் போக்குவரத்துத் தடைப்பட்டது. அமெரிக்காவில் சர்வதிகாரிகளுக்கு இடமில்லை எனக் கூறும் பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தினர்.
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பின் புதிய அரசாங்கச் செயல்திறன் துறையை Tesla நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் வழிநடத்துகிறார்.