ஐரோப்பா, இங்கிலாந்து கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றும் சரக்குக் கப்பல் ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளாகின.
இதன்போது ஏற்பட்ட தீயில் சுமார் 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கப்பல் ஊழியர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து கரைக்கு அப்பால் அமெரிக்க இராணுவத்திற்கு எரிபொருள் ஏந்திச் சென்ற கப்பலே, சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டுள்ளது.
அந்த அசம்பாவிதம் பெரும் அக்கறைக்குரியது என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
காயமடைந்தோர் 3 படகுகளில் சிகிச்சைக்காகக் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.