விண்வெளியில் சிக்கிக்கொண்ட இரண்டு நாசா வீரர்களைப் பூமிக்குக் கொண்டு வரும் Nasa-SpaceX முயற்சி பிற்போடப்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரே, பூமிக்குத் திருப்பி வர முடியாத நிலையில், கடந்த 2024 ஜூன் மாதத்திலிருந்து விண்வெளியில் உள்ளனர்.
அவர்கள் பயணம் மேற்கொண்ட போயிங் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள Cape Canaveral விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த நாசா வீரர்கள் இருவரையும் பூமிக்குக் கொண்டு வரும் முயற்சி பிற்போடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி, அவர்களை அழைத்து வரும் விண்கலன் நேற்று (12) புறப்பட்டிருந்தால் அவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பூமியை வந்தடைந்திருக்கலாம் என BBC சுட்டிக்காட்டியுள்ளது.
விண்கலனில் 4 புதிய விண்வெளி வீரர்களை அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப நாசா திட்டமிடப்பட்டுள்ளது.