செயற்கை இதயம் பெருத்தப்பட்ட நபருக்கு இதய நன்கொடை கிடைத்தமையை அடுத்து, அவருக்கு உண்மையான மனித இதயம் பொருத்தப்பட்டது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த குறித்த நபரே உலகில் முதன்முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டு, 105 நாள்கள் அவர் அந்த இதயத்தின் செயற்பாடுகளுடன் உயிர் வாழ்ந்திருக்கிறார்.
கடும் இதய செயலிழப்பை எதிர்நோக்கிய அவருக்கு டைட்டேனியத்தால் செய்யப்பட்ட செயற்கை இதயமே பொருத்தப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் இது போன்ற அறுவை சிகிச்சை நடப்பது அதுவே முதல் முறை. அந்த 6 மணிநேர அறுவை சிகிச்சை, சிட்னி – St. Vincent வைத்தியசாலையில் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி நடைபெற்றது.
அவர், இதய நன்கொடைக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அந்தச் செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. தற்போது 105 நாள்களுக்குப் பின்னர் இதய நன்கொடை கிடைத்ததால், அவருக்கு உண்மையான மனித இதயம் பொருத்தப்பட்டது.
செயற்கை இதயத்துடன் அவர் 100 நாள்களுக்கு மேல் வாழ்ந்துள்ளமை செயற்கை இதயத் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்திற்கு முக்கிய முன்னேற்றம் என்று மருத்துவ உலகினர் வியக்கின்றனர்.