தொடர் பாலியல் குற்றவாளி ஒருவர் தனது கடைசி தண்டனையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுத்வார்க், ஓல்ட் கென்ட் ரோட்டைச் சேர்ந்த ரஷானே லீ, 26, இரண்டு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், இலண்டன் நீதிமன்றத்தால் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
“இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்டவரின் துணிச்சலுக்கு சான்றாகும், அவரின் துணிச்சல் இந்த தண்டனையை குற்றவாளிக்கு பெற்றுக்கொடுக்க எங்களுக்கு உதவியது.” என, விசாரணையை வழிநடத்திய மெட் டிடெக்டிவ் ஜாக் வூட்ஸ் கூறினார்.
ஜூன் 1, 2024 அன்று, பாதிக்கப்பட்ட பெண், மத்திய இலண்டனில் இரவு 11 மணியளவில் அவள் வீட்டிற்குச் செல்லும்போது, லீ அவளை அணுகியதாக நீதிமன்றில் கூறியுள்ளார்.
லீ அவளுடன் பேசத் தொடங்கியதுடன், பின்னர், தன்னை ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர் பொலிஸில் நடந்த சம்பவத்தைப் புகாரளித்த பிறகு, ஜூன் 11, 2024 அன்று தனது நண்பனின் வீட்டில் வைத்து லீ கைது செய்யப்பட்டார்.