கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்திய வம்சாவளி பெண்கள் இருவர் இடம்பிடித்துள்னர். அனிதா ஆனந்த் (58 வயது) மற்றும் கமல் கேரா (36 வயது) ஆகிய இருவே அமைச்சுப் பெறுப்புகளை ஏற்றுள்ளனர்.
அனிதா ஆனந்துக்கு புதுமை, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சும், கமல் கேராவுக்கு சுகாதார அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்தின் பெற்றோர் வைத்தியர்கள் ஆவார்கள். அவர்கள் 1960ஆம் ஆண்டு கனடாவின் நோவா ஸ்கோடியாவில் உள்ள கென்ட்வில்லில் குடியேறினர். அனிதா 2019ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார்.
அவர் ஓக்வில்லியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லிபரல் கட்சியின் மூத்த தலைவர்கள் குழுவில் அனிதா முக்கிய உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்பும் அவர் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
இதேவேளை, இந்தியா – புதுடெல்லியில் பிறந்த கமல் கேராவின் குடும்பம், அவர் பள்ளியில் படிக்கும்போதே கனடாவுக்கு குடிபெயர்ந்தது.
கமல் கேராடொராண்டோவின் யார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்களில் இளம் பெண்களில் கமல் கேராவும் ஒருவர் ஆவார்.