நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர், 5 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் சிங் பாகேல் தலைமையில் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு இன்று (17) சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பயணத்தின்போது பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து கிறிஸ்டோபர் லக்சன் பேசவுள்ளார்.
இதன்போது, இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.