மேற்கூரையில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் இருந்ததால், தனது குழந்தையின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இளம் தாய் ஒருவர் கூறுகிறார்.
21 வயதான சோஃபி நோலன், 2023 இல் பர்கெஸ் பூங்காவிற்கு அருகிலுள்ள சவுத்வார்க் கவுன்சிலால் நிர்வகிக்கப்படும் நான்கு மாடி அடுக்கு மாடி குடியிருப்பில் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.
மார்ச் 11 அன்று, மேலே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது கூரையில் கசிவு ஏற்பட்டது, இதனால் அவரது தளபாடங்கள் மீது தண்ணீர் கொட்டியது.
இதனையடுத்து, “சபையிலிருந்து ஒருவர் வந்து, கசிவு காரணமாக மின் விளக்குகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது என்று கூறினார், அதற்கு பதிலாக அவர் எனக்கு ஒரு டோர்ச்சைக் கொடுத்தார்.” என்று சோஃபி நோலன் கூறினார்.
இந்த பிரச்சினை தனது இரண்டு வயது மகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், நோலன் தெரிவித்துள்ளதுடன், “இது பாதுகாப்பற்றது, என் மகள் சில நேரங்களில் இரவில் எழுந்திருப்பாள், அவள் இந்த கசிவுடன் இருட்டில் சுற்றிக் கொண்டிருப்பாள். சபை யாரையாவது அனுப்புவதாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறது, ஆனால் இப்போது ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
நோலன் தனது தற்காலிக தங்குமிடத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல, ஈரமான, பூஞ்சை மற்றும் கரப்பான் பூச்சி தொல்லைகள் பற்றி முன்னர் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், கவுன்சிலர் சாரா கிங், நோலனின் வீட்டு பழுதுபார்ப்பு சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.