மெட் பொலிஸ் கார், பாதசாரி ஒருவர் மீது நேற்று மதியம் மோதி விபத்துக்குள்ளானது.
இலண்டன் அம்பியுபுலன்ஸ் சேவை குழுவினர் கேம்பர்வெல் கிரீன் மற்றும் டென்மார்க் ஹில் இடையே ஒரு வீதியில் மதியம் 1.20 மணியளவில் அழைக்கப்பட்டனர்.
இதன்போது, 27 வயது பெண் ஒருவர் மருத்துவ உதவியாளர்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று மெட் கூறியது. அத்துடன், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எந்த பொலிஸ் அதிகாரிகளும் சிகிச்சை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
விபத்தை அடுத்து, டென்மார்க் ஹில் மற்றும் கேம்பர்வெல் நியூ வீதி தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.