வெளிநாட்டு வணிகங்களுடன் பணிபுரியும் ஆலோசனை நிறுவனங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க நிறுவனமான Mintz குழுமத்தின் ஐந்து ஊழியர்களை சீனா விடுவித்துள்ளது.
சீனாவில் வெளிநாட்டு உளவு பார்த்ததாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து,
மார்ச் 2023 இல் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட ஐந்து ஊழியர்களும் சீன பிரஜைகள் என்று Mintz Group குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 2023 இல் நிறுவனத்தின் பெய்ஜிங் அலுவலகத்தில் சோதனை நடத்திய பின்னர் அவர்கள் சீனாவின் பொது பாதுகாப்பு பணியகத்தால் தடுத்து வைக்கப்பட்டனர்.
சோதனை குறித்து அதிகாரப்பூர்வ சட்ட அறிவிப்பு எதுவும் வரவில்லை என்று மிண்ட்ஸ் குழுமம் அப்போது கூறி இருந்தது.
இந்த நிலையில், தடுப்புக்காவல் மற்றும் அதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டது குறித்து சீன அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.