இலண்டனின் முதல் நிரந்தர நேரடி முக அடையாளம் காணும் கெமராக்கள் குரோய்டனில் அமைக்கப்பட உள்ளன. எனினும் இந்த நடவடிக்கை குறித்து ஆர்வலர் குழுக்களால் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளன.
புதிய கெமராக்கள் பொலிஸாரின் முதல் நிரந்தர சாதனங்களைக் குறிக்கும் என்பதுடன், இதே தொழில்நுட்பத்துடன் கெமரா பொருத்தப்பட்ட வேன்கள் முன்பு குரோய்டன் நகர மையத்தில் பயன்படுத்தப்பட்டன.
எனினும், இந்த நடவடிக்கையானது பிரசாரக் குழுவான பிக் பிரதர் வாட்சை விமர்சிக்க தூண்டியுள்ளது.
ஒரு முன்னோடி திட்டத்தின் கீழ், கெமராக்கள் குரோய்டன் முழுவதும், , விளக்கு கம்பங்கள் மற்றும் கட்டிடங்களில் நிறுவப்பட உள்ளன.
எனினும், அதிகாரிகள் அப்பகுதியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது மட்டுமே அவை இயக்கப்படும் என்று பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இலண்டனின் மற்ற பகுதிகளுக்கு இதனை விரிவுபடுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.