இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான (WMCC) ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணிப் பொறிமுறையின் (WMCC) 33வது கூட்டம் இன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் அதிகாரிகளும், இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் நிலைமையை மதிப்பாய்வு செய்தனர்.
அத்துடன், எல்லை தாண்டிய நதிகள் மற்றும் கைலாஷ்-மானசரோவர் யாத்ரா உட்பட, எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை விரைவாக மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர்.
2024 டிசெம்பரில் பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் சிறப்புப் பிரதிநிதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளை இரு நாடுகளும் ஆராய்ந்ததாக வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் இராஜதந்திர மற்றும் இராணுவ வழிமுறைகளைப் பராமரிக்கவும் பலப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.