இலண்டன் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான முட்டைச் சிற்பங்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
வன விலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பெரிய அலங்கரிக்கப்பட்ட முட்டை சிற்பங்களின் இலவச பொதுக் கண்காட்சி இலண்டனில் மார்ச் 24 ஆம் திகதி தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு முட்டைச் சிற்பமும் சுமார் அரை மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளதுடன், டைனோசர், யானை என பல வடிவிலான முட்டைச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த முட்டை சிற்பங்களின் கண்காட்சி அடுத்த மாதம் 27ஆம் திகதி வரை நடைபெறும் என்பதுடன், பொதுமக்கள் “The Big Egg Hunt” செயலியைப் பயன்படுத்தி முட்டைகளைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லலாம்.
முட்டை கண்காட்சியின் இறுதியில் நூற்றுக்கும் அதிகமான முட்டைச் சிற்பங்கள் ஏலத்தில் விடப்படுவதுடன், அதில் கிடைக்கும் தொகை Elephant Family எனும் அற நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
ஆசிய யானைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட அற நிறுவனத்தின் முயற்சிக்குக் கைகொடுக்க இந்த முட்டை கண்காட்சி நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.