போப் பிரான்ஸிஸ் மற்றும் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆகியோரின் சந்திப்பு பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமிலா சகிதம் அரசு முறை பயணமாக வத்திக்கானுக்கு சென்று போப் பிரான்ஸிஸை நலன் விசாரித்து வருவார் என பக்கிங்ஹாம் அரண்மனை முன்னர் அறிவித்தது.
எனினும், இந்த சந்திப்பு தற்போது பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மருத்துவ ஆலோசனையின்படி, போப் பிரான்ஸிஸ் நீண்ட கால ஓய்வு தேவைப்படும் நிலையில் உள்ளார். எனவே, அவர் பூரணமாக குணமடைந்ததன் பின்னர் இந்த சந்திப்பு முன்னெடுக்கப்படும் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சுமார் ஐந்து வாரங்கள் சிகிச்சையை முடித்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை போப் பிரான்ஸிஸ் வீடு திரும்பியுள்ளார்.
இதேவேளை, மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் திட்டமிட்ட இத்தாலிப் பயணம் சில மாறுதல்களுடன் முன்னெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.