மத்திய இலண்டனில் உள்ள நியூசிலாந்து தூதரகத்தின் கூரையில் இன்று காலை ஒரு நபர் காணப்பட்டதை அடுத்து அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதிகாலை 3.30 மணிக்குப் பிறகு டிரஃபல்கர் சதுக்கத்திற்கு அருகிலுள்ள சிசிடிவியில் நியூசிலாந்து தூதரகத்தின் கூரையில் அந்த நபர் முதலில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நபர் தூதரக கட்டிடத்தின் கூரை வழியாக நகர்வதை பாதுகாப்பு ஊழியர்கள் கண்டுள்ளனர்.
இந்த நிலையில், அந்த நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ள பெருநகர காவல்துறை சிறப்பு கயிறு பயிற்சி பெற்ற அதிகாரிகளை அங்கு அனுப்பியுள்ளது.
அத்துடன், இலண்டன் தீயணைப்புப் படையானது, கூரையை பாதுகாப்பாக அணுகுவதற்கு உதவுவதற்காக, வான் ஏணி தளத்தை அங்கு கொண்டு வந்துள்ளது.