நியூசிலந்துக்கு 1,800 கிலோமீட்டர் வடக்கிழக்கே அமைந்துள்ள டோங்கா தீவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை அடுத்து, முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.
டோங்கா தீவுக்கு 100 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை மியன்மாரை 7.7 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியமை குறிப்பிடத்தக்கது.