உலகிலேயே ஆக நீளமான நாக்கைக் கொண்ட பெண் எனும் கின்னஸ் உலகச் சாதனையை அமெரிக்கா – கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஷனேல் தேப்பர் என்பவர் படைத்திருக்கிறார்.
பொதுவாக ஒருவரது நாக்கு 6 முதல் 7 செண்டிமீட்டர் நீளமிருக்கும். ஆனால், இவரது நாக்கின் நீளம் 9.75 செண்டிமீட்டர் ஆகும்.
ஷனேலின் நாக்கின் நீளத்தை ஒரு iPhoneக்கு ஒப்பிடலாம் என்று The Hindustan Times நாளேடு குறிப்பிட்டது.
8 வயதிலேயே அந்தச் சிறப்பு அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. “எனது நாக்கைப் பார்த்ததும் பலர் அதிர்ச்சியில் அலறுவதைப் பார்க்க எனக்குப் பிடிக்கும்” என்று வேடிக்கையாகக் கூறுகிறார் ஷனேல்.
ஷனேல் இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறார். அவர் தமது தனித்துவத்தை வெவ்வேறு தளங்களில் வெளிக்காட்டியிருக்கிறார்.