ஆசிய நாடுகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வரி விகிதங்களை அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் பின்னர் ஆசியாவின் பங்குச் சந்தைகள் சரிந்துள்ளன.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள முக்கிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்ததாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் இறக்குமதிகள் மீது 10 சதவீத வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில், சிங்கப்பூரின் Straits Times குறியீடு 1.07 சதவீதம் சரிந்துள்ளது.
ஜப்பானின் பங்குச் சந்தைக் குறியீடான Nikkei 225, 4 சதவீதம் சரிந்தது. ஜப்பானின் இறக்குமதிகள் மீது டிரம்ப் 24 சதவீத வரி விதித்ததை அடுத்து அந்தச் சரிவு ஏற்பட்டது.
மேலும், ஆஸ்திரேலியாவின் ASX 200 குறியீடு 2 சதவீதம் சரிந்தது.
இதேவேளை, ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு சதவீத வரி விதிக்கப்பட்டதற்கான காரணத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விவரிக்கவில்லை. எனினும்,
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை சிங்கப்பூருக்கு மட்டுமே கூடுதல் வரி விதிக்கப்படவில்லை.
ஆசிய நாடுகளுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரி விவரங்கள் இதோ :
கம்போடியா 49 சதவீத வரி
லாவோஸ் 48 சதவீத வரி
வியட்நாம் 46 சதவீத வரி
மியன்மார் 45 சதவீத வரி
தாய்லந்து 37 சதவீத வரி
சீனா 34 சதவீத வரி
இந்தோனேசியா 32 சதவீத வரி
தைவான் 32 சதவீத வரி
இந்தியா 27 சதவீத வரி
தென் கொரியா 26 சதவீத வரி
புருணை 24 சதவீத வரி
ஜப்பான் 24 சதவீத வரி
மலேசியா 24 சதவீத வரி
பிலிப்பீன்ஸ் 18 சதவீத வரி
சிங்கப்பூர் 10 சதவீத வரி