நிமோனியா காய்ச்சல் காரணமாக நீண்ட நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ், 2 வாரங்களுக்கு முன்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், போப் பிரான்சிஸ், திடீரென பொதுமக்கள் மத்தியில் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். வத்திக்கானில் பொதுமக்களை அவர் சந்தித்தார்.
88 வயது போப் பிரான்சிஸ், Saint Peter’s Squareஇல் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வலம் வந்தார். அவர் மிகவும் மெல்லிய குரலில் பேசியதாக AFP செய்தி கூறுகிறது.
ஆனால், கடந்த மார்ச் 23ஆம் திகதி அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியபோது பேசியதைக் காட்டிலும் தற்போது சற்றுத் தெம்புடன் காணப்படுவதாக அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் இதற்குமுன் பிப்ரவரி 14ஆம் திகதியே பொதுமக்கள் முன் தோன்றியிருந்தார். அவர் தொடர்ந்து உடல்நலம் தேறி வருகிறார்.