அமெரிக்கா விதித்துள்ள வரியை குறைக்கும் பொருட்டு, சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகள் வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொண்டுள்ளன.
அவை அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சு நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அறிவித்த வரிகளை, மேற்படி நாடுகளின் பொருளியல் ஆலோசகர்கள் தற்காத்துப் பேசியுள்ளனர்.
வரி விதிப்பு உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சி என்று அவர்கள் வலியுறுத்தினர்.
டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் பொருளியல் மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை நிலவுகிறது.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட வரிகளால் அமெரிக்கப் பங்குச் சந்தை சுமார் 6 டிரில்லியன் டொலரை இழந்தது.
ஒரே நேரத்தில் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது டிரம்ப் நிர்வாகத்திற்குச் சவாலாக அமையக்கூடும். மேலும், அது பொருளாதார நிச்சயமற்ற நிலையை நீட்டிக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.