மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்றிய முதலாவது சம்பவம் மெக்சிக்கோவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான 3 வயது சிறுமி மரணித்துள்ளார்.
நோய்த்தொற்றின் காரணமாகச் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, பின்பு மரணித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 38 பேரைச் சோதித்துள்ளதாக மெக்சிக்கோ சுகாதார அமைச்சு தெரிவித்தது.
எனினும், அவர்கள் யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புக் குறைவாக உள்ளதாகவும் மெக்சிக்கோ சுகாதார அமைச்சு தெரிவித்தது.