உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இத்தாலிக்கு நேற்று (09) சென்றுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் – ராணி கமிலா தம்பதி, தமது திருமண நாளில் போப் பிரான்ஸிஸை சந்தித்து ஆசி பெற்றனர்.
முன்னதாக, இவர்களது இந்த இத்தாலி பயம் திட்டமிட்டிருந்தபடி முன்னெடுக்க முடியாமல் போனது.
போப் பிரான்ஸிஸ் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமையால் அவருக்கு ஓய்வு எடுப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்தி : போப் – மன்னர் சந்திப்பு பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் ஒத்திவைப்பு!
இந்நிலையில், தமது திருமண நாளிலேயே போப் பிரான்ஸிஸை சந்தித்து மன்னர் சார்லஸ் – ராணி கமிலா தம்பதி ஆசி பெற்றுள்ளனர்.
இருர்கள் இவருக்கும் திருமணமாகி, நேற்றுடன் 20 ஆண்டுகள் பூர்த்தியாகின.
போப் பிரான்ஸிஸ், மன்னர் சார்லஸ் கமிலா தம்பதியருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க, மன்னர் சார்லஸ், போப் பிரான்சிஸ் விரைவில் முழுமையாக நலம்பெற வாழ்த்தினர்.