சிங்கப்பூரில் மே 3 ஆம் திகதி சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெறும் என, தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் இன்று நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்ட நிலையில், இம்மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் நடைபெறவிருக்கும் முதல் தேர்தல் இது என்பதுடன், கடந்த வருடம் மே மாதம் வோங், பிரதமர் பொறுப்பை ஏற்றார்.
சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டப்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு அமைச்சர்கள் பதவி துறக்கவேண்டியதில்லை என்பதுடன், அவர்கள் தொடர்ந்து பொறுப்புகளை வகிக்க முடியும்.