ஈஸ்டர் தினத்தையொட்டி உக்ரேனில் 1 நாள் சண்டை நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் தொடரும் நிலையில், இது முதலாவது குறிப்பிடத்தக்க சண்டை நிறுத்தமாக பார்க்கப்படுகின்றது.
மனிதாபிமான காரணங்களை மனத்தில்கொண்டு உள்ளூர் நேரப்படி இன்று மாலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு வரை சண்டைநிறுத்தம் நடைமுறையில் இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் ரஷ்யா நிறுத்தும் என்றும் உக்ரேனியத் தரப்பும் தங்களைப் பின்பற்றும் என்று நம்புவதாகத் புட்டின் கூறியுள்ளார்.
எனினும், சண்டை நிறுத்தத்தை மீறக்கூடிய செயல்களைக் கையாள்வதற்குத் தமது படைகள் தயார்நிலையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரஷ்யா 30 மணிநேரச் சண்டைநிறுத்தத்தை மீறாமல் இருந்தால் அதனை ஈஸ்டர் தினத்திற்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும் என்று உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.