போப் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் காலமானதாக வத்திகன் அறிவித்துள்ளது.
காசா சண்ட்டா மார்ட்டாவில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்துள்ளது.
முன்னதாக, நிமோனியா நோய்த்தொற்றினால் அவர் 5 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நோய்த்தொற்றினால் அவரது நுரையீரல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
அதனையடுத்து, கடந்த மாதம் 23ஆம் திகதி அவர் இல்லத்துக்கு திரும்பி குணமடைந்து வந்ததுடன், இம்மாதத் தொடக்கத்தில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதக வத்திகான் தெரிவித்திருந்தது.
ஆர்ஜண்ட்டினாவில் 1936ஆம் ஆண்டில் பிறந்த போப் பிரான்சிஸ் 2013ஆம் ஆண்டில் போப்பாக பொறுப்பேற்றார்.