ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை பிற்பகல் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
மாநிலத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து அப்துல்லா எழுதிய கடிதத்தில், இந்த தாக்குதல் “வெறும் ஒரு பிராந்தியத்திற்கோ அல்லது ஒரு கட்சிக்கோ ஏற்பட்ட சோகம் அல்ல – இது ஜம்மு காஷ்மீரின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“மக்களின் பிரதிநிதிகளாகவும், ஜனநாயக விழுமியங்களின் பாதுகாவலர்களாகவும் – நமது அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைந்து, நமது பதிலில் ஒற்றுமையாக நிற்பது கூட்டுக் கடமை என்று நான் நம்புகிறேன்.
இந்த சந்திப்பு ஜம்மு காஷ்மீர் மக்களின் பலத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் பொதுவான குரலை உருவாக்க உதவும்” என்று அப்துல்லா கூறியுள்ளார்.