இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தற்போது மோதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த மோதல் அணு ஆயுதப் போராக மாற வாய்ப்பில்லை என்று, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், இரு நாடுகளின் போருக்கு நடுவே தலையிடுவது தங்கள் வேலையில்லை என்றும், இரண்டு நாடுகளையும் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று அமெரிக்காவால் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதை ராஜாங்க ரீதியாக அணுகவே அமெரிக்கா விரும்புவதாகக் கூறிய அவர், இந்தப் போர் பிராந்திய அளவிலான போராகவோ அல்லது அணு ஆயுதப் போராகவோ மாறிவிடக் கூடாது என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.