அரசியல் இஸ்திரமின்மை மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், உலக வங்கி மற்றும் உலக நாடுகளின் உதவியைத் தான் அண்மைக்காலமாக பெற்று வந்தது.
தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவால் ஏற்பட்ட இழப்புகளுக்கு, பாகிஸ்தான் அரசு நட்பு நாடுகளிடம் கூடுதல் கடன்களைக் கோரியுள்ளது.
“எதிரிகளால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு, சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடன்களுக்காக பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுக்கிறது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச கூட்டாளிகள் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று, பாகிஸ்தான் அரசின் பொருளாதார விவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
எனினும், இதை மறுத்துள்ள பாகிஸ்தான் அரசு, தங்கள் பொருளாதர அமைச்சகத்தின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.