பில்ஸ்டனில் இரண்டு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்த நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் இரண்டு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்குப் பிறகு, வால்வர்ஹாம்டனுக்கு அருகிலுள்ள பில்ஸ்டனில் உள்ள லண்ட் பிளேஸ் மற்றும் மார்பரி டிரைவ் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிவிக்கப்பட்தாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்பரி டிரைவ் பகுதியில் உள்ள வீட்டில் அந்த நபர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக படை தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது என்பது தொடர்பில், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் தீயணைப்பு சேவையுடன் இணைந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.