ஏட்டிக்குப் போட்டியாக விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக மூண்டுள்ள வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் சீனா ஆகியன இணக்கம் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளின் வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைக்க அதிகாரிகள் இணங்கியுள்ளனர்.
அத்துடன், வரியை வெகுவாகக் குறைக்கப் போவதாகவும் 115 சதவீதம் வரை வரி குறைக்கப்படலாம் எனவும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
சீனாவின் துணை நிதியமைச்சர் லீ செங்காங் உலகத்திற்கு இது நல்ல செய்தி என பாராட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக நீடித்த வர்த்தகப் போர் உலகளவில் பெரும் பொருளாதாரப் பாதிப்பும் ஆட்குறைப்பும் ஏற்படக் காரணமாகின.
புதிய அறிவிப்பு வந்த பிறகு டாலர் மதிப்பும் பங்கு விலையும் உயர்ந்தன. இதனால் முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கை பிறந்திருப்பதாகக் கூறப்படுகிறது.