இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் ஓர் அறிவிப்பால் பராமரிப்பு பணியாளராக இங்கிலாந்து செல்ல எதிர்பார்த்திருக்கும் வெளிநாட்டவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
காரணம், விசேட தேவையுடையவர்கள், முதியவர்கள் மற்றும் உடல் குறைபாடு உடையவர்களைக் கவனித்துக்கொள்ளும் பராமரிப்பு பணியாளர் (Care worker) வேலைக்காக விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்த பரீசிலித்து வருவதாக இங்கிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.
புலம்பெயர்வோரின் தொகையைக் கட்டுப்படுத்துவரின் இதன் நோக்கம் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களுக்கு பதிலாக ஏற்கெனவே இங்கிலாந்தில் தங்கியிருப்போரை குறித்த வேலைக்கு எடுக்க திட்டம் வைத்துள்ளதாக அவர் கூறினார்.
எனினும், இந்த அறிவிப்பிற்கு Care England துறைசார் அமைப்பு மற்றும் Independent Care Group அமைப்பு ஆகியன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விடயத்தை அரசாங்கம் தவறான புரிதலுடன் கையாள்வதாக அவை தெரிவித்துள்ளன.
ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மருத்துவ பராமரிப்பு துறைக்கு இது மேலும் ஒரு பலத்த அடி என்று Care England துறைசார் அமைப்பு எச்சரித்துள்ளது.
அதேவேளை, “இந்த விடயத்தை அரசு தவறாகப் புரிந்துகொண்டுள்ளது. நாங்கள் Care துறைக்கு இங்கிலாந்தில் இருந்தே வேலைக்கு ஆட்களை எடுக்க முயல்கிறோம். ஆனால், தேவையான அளவில் ஆட்கள் இந்த நாட்டில் கிடைக்கவில்லை” என Independent Care Group என்னும் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.