ஐரோப்பிய, ஆசிய பங்கு சந்தைகளின் பங்குகள் ஏற்றம் காணுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளமையால் இவ்வாறு ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குகள் ஏற்றம் காணுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தொடர்புடைய செய்தி : வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா – சீனா இணக்கம்!
வர்த்தகப் போர் முடிவுக்கு கொண்டுவரும் இணக்கப்பட்டு அறிவிப்பு வந்தது முதல் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் 1 சதவீதத்துக்கும் மேலான பங்கு சந்தை வளர்ச்சி காணப்படுகிறது.
அத்துடன், ஹாங்காங் பங்குச் சந்தையில் 3 சதவீதத்துக்கும் அதிகமான ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் தைவான் ஆகியவற்றின் பங்குச் சந்தைகளில் லாபகரமான சூழல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் மோதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தையில் 3 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பங்குச் சந்தையில் 9 சதவீதத்துக்கும் கூடுதலான வளர்ச்சி தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, எண்ணெய் விலையும் 3 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்திருக்கிறது. மாறாக, தங்க விலை கடந்த மாத வளர்ச்சியைக் காட்டிலும் சரிந்துள்ளது.