அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வழக்கம்போல் பலர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் அங்கு நுழைந்து, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
அந்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற நிலையில், அங்கு விரைந்த பொலிஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.
காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.