“கடுமையான வன்முறை” திட்டத்திற்காக, இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களை குறிவைத்ததாக ஈரானிய உளவாளிகள் மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஈரானிய உளவாளிகள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
லண்டனைச் சேர்ந்த முஸ்தபா செபாவந்த் (வயது 39), ஃபர்ஹாத் ஜவாடி மனேஷ் (வயது 44), மற்றும் ஷபூர் காலேஹாலி கானி நூரி (வயது 55), ஆகியோரே வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
லண்டனை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன ஊடக அமைப்பான ஈரான் இன்டர்நேஷனலில் பணிபுரியும் தனிப்பட்ட பத்திரிகையாளர்களை குறிவைத்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மூன்று பிரதிவாதிகளும் தஞ்சம் கோரிய பிறகு இங்கிலாந்தில் தங்க தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டுள்ளனர்.
இம்மூவரும் 2016 – 2022இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இங்கிலாந்திற்கு குறியேறியுள்ளனர்.