பங்களாதேஷில் இருந்து நில எல்லைகள் வழியூடாக வரும் இறக்குமதிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இந்தியாவின் வர்த்தக அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
ஏற்றுமதிகளை நம்பி இருக்கும் பங்களாதேஷின் பொருளாதாரத்திற்கு அந்த அறிவிப்பு, பெரும் வர்த்தக பாதிப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
தயாரான துணிகள், பங்களாதேஷிலிருந்து நிலம் வழி இறக்குமதியாக முடியாது என்று இந்தியா ஏற்கெனவே அறிவித்தது. அத்துடன், பஞ்சு மற்றும் மரத்தால் செய்யப்பட்ட வீட்டுப் பொருள்கள் ஆகியவை இறக்குமதியாக வடக்கிழக்கு இந்தியாவின் குறைந்தது 6 இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியாவிலிருந்து நிலம் வழியாக இறக்குமதியாகும் நூலுக்கு பங்களாதேஷ் தடை விதித்திருந்தது.
அதன் பிறகு இந்தியா மேற்படி புதிய அறிவிப்பைச் செய்துள்ளது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பதவியிலிருந்து கடந்த ஆண்டு இறக்கப்பட்டார். பிறகு அவர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்று தஞ்சம் புகுந்தார்.
அதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் உறவு கசந்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.