பிரான்ஸ் – பாரிஸ், ஓர்லி விமான நிலைய போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் நேற்றைய தினம் (18) ஏற்பட்ட கோளாறே அதற்குக் காரணமாகும்.
இதனால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 130 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கோளாறு இன்னும் சரிசெய்யப்படாததால் விமான நிறுவனங்கள் தங்கள் விமானச் சேவைகளை 40 சதவீதம் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.
பயணிகள் பலரும் மாற்றுப் போக்குவரத்தைத் தேடுகின்றனர்.
பாரிஸ் நகரின் 2ஆவது ஆகப் பெரிய விமான நிலையம் ஓர்லி ஆகும்.
கடந்த 2024ஆம் ஆண்டு சுமார் 33 மில்லியன் பயணிகள் அந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தினர்.