சைக்கிளில் வேலைக்கு சென்ற 50 வயதுடைய இங்கிலாந்து பிரஜை ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்து, டோர்செஸ்டர் நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக டோர்செஸ்டர் நகரின் பிரிட்போர்ட் வீதியில் கார் மற்றும் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விபத்தில் படுகாயமடைந்திருந்த மேற்படி நபரை, மருத்துவ உதவி ஹெலிகாப்டர் மூலம், சவுத்தாம்ப்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
நபர் உடனடியாக கொண்டுசெல்லப்பட்ட போதும், துரதிர்ஷ்டவசமாக அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், குறித்த நபர் சைக்கிளில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது கார் மோதியதில் படுகாயமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இது குறித்து பொலிஸ் கூறுகையில், “இந்த மோதலில் இறந்த அந்நபரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. சம்பவத்தின் முழு சூழ்நிலையையும் நிறுவ, முழுமையான விசாரணை நடத்துவது எங்கள் கடமை” என்றனர்.