பிரான்ஸில் இருந்து இங்கிலாந்துக்கு செல்ல முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு, ஆங்கில கால்வாயில் கவிழ்ந்ததில் ஒருவர் மரணித்துள்ளார்.
படகில் இருந்த சுமார் 60க்கு அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பிரான்ஸின் BoulognesurMer நகருக்கு அருகே படகு கவிழ்ந்துள்ளது.
படலில் இருந்து மீட்கப்பட்டவர்களில் தாய் ஒருவருரும் அவருடைய மகனும் அவசர சிகிச்சை தேவைப்பட்டமையால், ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் இருவரின் உடல் வெப்பம் வழக்கத்தை விடக் குறைந்திருந்ததால் அவ்வாறு அவர்கள் அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆங்கில கால்வாயில் ஏற்கெனவே புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு ஒன்று அண்மையில் மூழ்கி பலர் உயிரிழந்தனர்.
இதேவேளை, எல்லை தாண்ட முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களால் இங்கிலாந்திற்கும் பிரான்ஸ் அரசுக்கும் இடையே அரசியல் சர்ச்சை தொடர்ந்தும் நீடிக்கிறது.