கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக சக்திவாய்ந்த சூறாவளியொன்று ஜப்பானை தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையை கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 172 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாகவும், அதனால் மிக பயங்கர மழை பெய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மிக பெரிய அலைகள் வீசிவரும் நிலையில், கடும் வெள்ளம் மற்றும் மண் சரிவு குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
(பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது)