இந்தோனேசியாவின் ஜாவா தீவு என அழைக்கப்படும் அண்டிய கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலின் படி 6.0 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் , இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை , இன்று அதிகாலை பவுவா நியூகினியா தீவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.