249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. 2500க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் தலைநகர் காபுல் உள்ளிட்ட சில பகுதிகளின் வாக்குச்சாவடிகளில் குண்டுகள் வெடிப்பு சபம்வங்கள் இடம்பெற்றமையினால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐயாயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவுகள் இடம்பெறுகின்றன. இந்தநிலையில், இன்று காலை தலைநகர் காபூலில் வாக்குப்பதிவு ஆரம்பமான வேளை, தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன், நாட்டின் பிறபகுதிகளிலும் அவர்கள் தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் வாக்களர்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.