எதிர்வரும் காலங்களில் திமிங்கிலங்களை வர்த்தகத்திற்காக வேட்டையாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (திங்கட்கிழமை) நீக்கப்பட்டுள்ளது.
உலகத் திமிங்கில பாதுகாப்பு ஆணையத்திலிருந்து ஜப்பான் விலகியதைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி மூன்று தசாப்தங்களின் பின்னர் 5 ஜப்பானிய திமிங்கில வேட்டை கப்பல்கள் முதல் தடவையாக வர்த்தக நோக்கில் பயணத்தை ஆரம்பித்துள்ளன.
திமிங்கில வேட்டைக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
இருப்பினும் ஜப்பானில் திமிங்கிலங்களை வேட்டையாடும் சமூகத்தினர் புதிய அனுமதியைக் கொண்டாடி வருகின்றனர். ஜப்பானில், திமிங்கில வேட்டை நெடுநாள் பாரம்பரியமாகக் கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி – krishan