பாகிஸ்தானை சேர்ந்த 262 பைலட்கள், போலி பைலட் உரிமம் வைத்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, பல சர்வதேச விமான நிறுவனங்கள், பாகிஸ்தானை சேர்ந்த பைலட்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.கடந்த மே மாதம் 22 ஆம் தேதி, கராச்சியில் நடந்த விமான விபத்தில் 97 பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 262 பைலட்கள் போலி உரிமம் வைத்துள்ளது கண்டறியப்பட்டது.
அதில் பாகிஸ்தானில் பணியாற்றிய 141 பேரை பணி நீக்கம் செய்த, விமானப் போக்குவரத்து அமைச்சகம், மீதமுள்ள 121 பேர் குறித்த விவரங்களை, சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.இதையடுத்து, குவைத், கத்தார், ஓமன் மற்றும் வியட்நாமில் பணியாற்றும் பாகிஸ்தான் பைலட்களுக்கு, விமானங்கள் இயக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.