0
பங்களாதேஷில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள்,பெண்கள், உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.டாக்காவில் உள்ள சதர்காட் படகு முனையத்தில் இருந்து 50 பயணிகளுடன் புரிகங்கா ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் 6 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 23 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. சில பயணிகள் நீந்தி பாதுகாப்பாக கரை சேர்ந்த நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.