0
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பொது வெளியில் வரும் பொதுமக்கள் யாரும் முக கவசம் அணிய தேவையில்லை என்று சீன அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது முக கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.