சீனாவின் உகான் நகர் கொரோனாவின் தாய் இடம் என அனைவராலும் வர்ணிக்கப்படுகிறது. ஆம் 2019 ஆண்டு அங்கே தான் முதல் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அத்தகைய கொரோனாவினால் இந்த உலக நாடுகளின் அனைத்து விதமான நடவடிக்கைகளும் தலை கீழாக மாறியது பல பலமான நாடுகள் கூட திக்கிதிணறினர்.
மீண்டும் அதே போல ஒரு கொரோனா தாக்கத்தை முகம் கொடுத்துள்ளது சீன குறிப்பிட்ட காப்பகுதியில் தலைநகர் பீஜீங் உட்பட பல பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.இதனால் பீஜிங் உட்பட்ட தலை நகரில் சன நாட மாட்டம் குறைந்துள்ளதுடன் வர்த்தக நடவடிக்கை மந்த நிலையை எட்டியுள்ளது.
நேற்று காலை வரையில் மாத்திரம் சீனா முழுவதும் 24 மணித்தியாலயத்துக்கள் மாத்திரம் 24263 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது 515 பேர் மட்டும் பீஜிங்கில் அடையாளம் காணப்பட்டுள்ளார். தேவையற்று மக்கள் வெளியேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.