சீனாவில் குறிப்பிட்ட சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சீனா அரசு உண்மை தகவலை வெளியிடா நிலையில் தற்போது சீனா தலை நகர் பீஜிங்கிள் சடலங்கள் தகனம் செய்யும் இடங்களில் குவியும் மக்கள் எண்ணிக்கை கூடியுள்ளதுடன் தகன கடமை செய்பவர் தயக்கமும் காட்டி வருகின்றனர்.
கொரோனாவின் பிறப்பிடமான உஹான் என அனைவராலும் சீனா கூறப்படுகின்றது. தன் வினை தன்னையே சுடும் என்பார்கள் அதற்கு ஏற்ற நிலையை சீனா இப்போதும் அனுபவித்து வருவதுடன் உலக நாடுகளையும் பொருளாதாரத்தையும் தலை கீழ் நிலைக்கு கொண்டு சென்ற பெருமையும் கொரோனாவை சாரும் .
இப்படி பட்ட கொரோனா மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. அதை சீனாவே முதலில் அனுபவிக்க நேரிட்டுள்ளது. அங்கே கடந்த 7ஆம் திகதி ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரே இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது .