பல வருடங்களாக ஏவுகணை பரிசீலிப்பதை தனது பொழுதுபோக்கு போல செய்து வரும் வட கொரியா உலக நாடுகளை அடிக்கடி அச்சுறுத்துகின்றது என்பதில் ஐயம் எதுவும் இல்லை
இப்படி இருக்க நேற்றைய தினம் ஏவுகணை பரிசோதனை ஒன்றை செய்துள்ள நிலையில் தலைநகர் பியோங்கி யாங்குக்கு தெற்கே உள்ள தீவிலிருந்து 3 ஏவுகணையை வீசியுள்ளது.
வடகொரியாவை பொறுத்தவரை தென்கொரியா அமெரிக்கா கூட்டு இராணுவ பயிற்சி செய்வது தமக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் தாம் இவ்வாறு ஏவுகணை பரிசோதனைகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்ற நிலைப்பாட்டை கூறி வருகிறது.
மேலும் வடகொரியா மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சார்பாக தடை உள்ள நிலையில் அந்த தடைகளை மீறி எதற்கும் தயார் என்று பரிசோதனை செய்வது அனைவரது கவனத்தையும் வட கொரியாவின் பக்கம் திருப்பியுள்ளது .
கடந்த வருடம் மாத்திரம் வடகொரியா செய்த ஏவுகணை பரிசோதனை 70 க்கு மேலாக உள்ளது .