2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர்.
ஆனால் அதற்கு மாறாக கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு செல்ல தடை, ஆண்கள் துணையின்றி பயணிக்க தடை, வேலைக்கு செல்ல தடை என பல்வேறு கட்டுப்பாடுகளால் பெண்கள் கஷ்டப்படுகின்ற்னர் .
இந் நிலையில் பெண்கள் இனி ஆண் வைத்தியர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களின் நோய்களுக்கு பெண்வைத்தியர்களிடம் மட்டுமே சிகிச்சை பெறவேண்டும். மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு வைத்தியசாலையும் இதனை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.