உக்ரைன் ரஷிய போர் காலம் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் ரஷியாவின் தாக்குதல் பல விதமாக தொடரும் போது உதவுங்கள் என்ற உக்ரைனின் வேண்டுதலை நிறைவேற்றும் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ஒன்றாக உதவி கரம் உக்ரைனுக்கு வழங்க வந்துள்ளது.
பிரிட்டன் முதல் உதவியாக கனரக பீரங்கிகளை வழங்க உள்ளது. 14 சேலஞ்சர் -2 பீரங்கிகள் மற்றும் பீரங்கி தாக்குதலுக்கு பயன்படும் நவீன தளவாடங்களையும் அனுப்புவதாக பிரிட்டன் சனிக்கிழமை கூறியது.
இதனால் கோபமடைந்த ரசிய கீழ் கண்டவாறு அறிக்கையை ரசிய அதிபர் மாளிகையில் இருந்து விடுத்துள்ளது ” எம்முடன் இருக்கும் எதிர்ப்பை பிரிட்டன் உக்ரனை கருவியாக பயன்படுத்தி செய்வதாகவும் பிரிட்டன் அனுப்பும் சேலஞ்சர் -2 பீரங்கிகள் தீப்பற்றியெரியும் ” என எச்சரித்துள்ளது.